
posted 7th April 2022
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் புதன்கிழமை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
பல நாட்களாக எரிபொருள் இல்லாது மூடப்பட்டிருந்த இந்த எரிபொருள் விநியோக நிலையங்களில் இன்று மக்கள் பெருமளவில் முந்தியடித்து நீண்ட கியூ வரிசையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு காத்திருந்தை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக பெற்றோல், டீசல் விநியோகம் இடம்பெற்றதால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் இந்த எரிபொருள் விநியோகம் பொலிசார், இரானுவத்தினரின் பாதுகாப்புடன் இடம்பெற்றது.
தற்சமயம் இந்த மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பிப்பதற்கான உழவு வேலைகள் இடம்பெறுவதனால் உழவு இயந்திரங்களுக்கென டீசலை பெற்றுக்கொள்வதற்கு மிக நீண்ட கியூ வரிசைகளில் மக்கள் காணப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய