
posted 26th April 2022

கிழக்கிலங்கை – துறை நீலாவணையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளரும், ஆசிரியருமான பாக்கியராசா மோகனதாஸின் மறைவு குறித்து, ஊடக அமைப்புக்கள் அரசியல் முக்கியஸ்த்தர்கள், கல்விமான்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் நுண்கலைத்துறைப்பட்டதாரியான இவர் இலங்கையின் பிரபல தமிழ் தினசரிகளில் பிராந்திய செய்தியாளராகக் கடமையாற்றி வந்ததுடன், சிறந்த பல நேர்காணல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சம்மாந்துறை மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றிவரும் இளம் ஊடகவியலாளரான பாக்கியராசா மோகனதாஸ் 2019 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவராவார்.
மேலும், ஈழத்து தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் 74 பேரை நேர்காணல் செய்து “படைப்பாக்க ஆளுமைகள்” என்னும் பெயரிலான நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினரான இவரது இறுதிக்கிரியைகள், இரங்கல் உரைகளுடன் துறை நீலாவணையில் இன்று (ஞாயிறு) இடம்பெற்றது.
“இளம் ஊடகவியலாளராகத் துடிப்புடனும், ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்தியும் திகழ்ந்த மோகனதாஸின் இழப்பு கிழக்கின் ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; கோவிந்தன் கருணாகரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஊடக அமைப்புக்கள் பலவும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY