
posted 26th April 2022
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால அரசொன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன்பட்டுள்ளதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி - உலமா கட்சி வரவேற்றுள்ளது.
இது பற்றி கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
தற்போதுள்ள அரசியல், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால அரசை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அவர்கள் செவி மடுத்திருப்பது நல்லதொரு விடயமாகும்.
அத்துடன் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் நாடாளுமன்றம் ஊடாக அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளதானது இப்பிரச்சினைகளை ஓரளவு தீர்க்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரும் போது இனவாதங்களுக்கும், மதவாதங்களுக்கும் எதிராக சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு இனத்துக்கெதிராக அல்லது மதத்துக்கெதிராக பேசுவோர் எழுதுவோருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதையும் ஜனாதிபதியின் கவனத்துக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY