உயிர்த்த ஞாயிறு படுகொலை - உண்மை வெளியாக வேண்டும் - ஜெயபாலன் குரூஸ் அடிகளார்

உயிர்ப்பு ஞாயிறு படுகொலைக்கும், அவலநிலைக்கும் யார் காரணகத்தா என்பது வெளியாக வேண்டும் என அருட்பணி சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார் இந் நாள் நினைவேந்தலின்போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அடிகளார் மேலும் தெரிவிக்கையில்;

ஏப்பரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நாங்கள் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலை நடாத்தினோம்.

இந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற வேண்டும். அத்துடன், இதில் மரணித்தவர்களின் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றிக் கிடைக்கப்பெற வேண்டும் என நாங்கள் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

அத்துடன் இத் தாக்குதலுக்கட்பட்ட வாழும் மக்களுக்கு தொடர்ந்து அவர்களின் உடல் உள நலமாக இருக்க வேண்டும் எனவும் இறைவனை நோக்கியவர்களாக இன்றைய நாளில் வேண்டிக்கொண்டோம்.

இன்றைய நாட்டின் நிலையை நோக்கும்போது தொடர்ந்து அவலமான நிலையே தொடர்கின்றன.

மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சனை அரசியல் பிரச்சனை, இதற்கிடையில் கொழும்பு மறைமாவட்டத்தில் ஆயர்கள், குருக்கள் மற்றும் ஏனை மறைமாவட்டங்களில் இந் நாட்டின் நிலைமையை முன்வைத்து செபிக்கின்றார்கள்.

அத்துடன், யாராக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த படுகொலைக்கும் அவலநிலைக்கும் யார் காரணகத்தா என்பது வெளியாக வேண்டும் என அரசையும், அத்துடன் இறைவனையும் நோக்கி வேண்டியவர்களாக இருக்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலை - உண்மை வெளியாக வேண்டும் - ஜெயபாலன் குரூஸ் அடிகளார்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY