
posted 8th April 2022
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உணவின்றி வரிசையில் காத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு டீசல் பெறுவதற்காக உதயநகர் பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் சென்றிருக்கின்றார்.
அங்கு சென்று வரிசையில் காத்திருந்தபோது, நீண்ட வரிசை என்பதால் அங்கிருந்து சென்றால் தான் நின்ற இடம் பறிபோய்விடும் என்று எண்ணி உணவுக்காக செல்லாது காத்திருந்திருந்தார்.
அன்று மாலை ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 8மணிக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
மறு நாள் 3ஆம் திகதி அதிகாலை கொழும்பிலிருந்து அரச பஸ் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோது வீதி ஓரத்தில் குறி்த்த நபர் வீழ்ந்து கிடந்ததை அவதானித்த அதன் சாரதியும் நடத்துநரும் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அவர் மயங்கிக் காணப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய