
posted 8th April 2022
தற்பொழுது இவ் அரசாங்கத்தால் சுகாதார சேவைகள் மிகவும் சீரழிந்து போயுள்ளன. மன்னாரை பொருத்தமட்டில் இருதய நோயாளி ஒருவரை இங்கு கொண்டு வரும் பட்சத்தில் அந் நோயாளிக்கான மருந்து இங்கு கிடையாது. சத்திர சிகிச்சைக்கு ஒரு நோயாளியை உட்படுத்தும்போது அவரை நினைவு மாற்றக்கூடிய மருந்துகூட கிடையாது.
இவ்வாறு இவ் வைத்தியசாலையில் முக்கியமான மருந்துகள் இன்மையால் அநியாயமாக உயிர்கள் பறிபோகும் நிலைக்கு காரணம் இந்த அரசாங்கமே என தெரிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமைகள்புரியும் நான்கு சுகாதார சேவைகள் அமைப்புக்களான வைத்தியர், தாதியர், சுகாதார பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் அடங்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான கண்டன போராட்டத்தில் குதித்தனர்.
வெள்ளிக்கிழமை (08.04.2022) காலை 11.30 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் மன்னார் நகரை வலம் வந்ததுடன் அரசுக்கு எதிரான பதாதைகளை தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஏந்தியவாறு கோஷம் இட்டவாறு சென்றது.
அவர்கள் ஏந்திச் சென்ற பதாதைகளில்;
'ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை கண்டிக்கின்றோம்'
'தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்து’
’சுகாதார சேவைக் கட்டமைப்புக்கு நிதியை முன்னுரிமை படுத்து'
*'கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்'8
'அனுகுண்டு இல்லாமலே அழிகின்றது இலங்கை அரசின் அதிகாரத்தினால்'
'மருத்துவ பற்றாக் குறையை நிவர்த்தி செய்'
போன்ற வாசகங்கள் உள்ளடக்கப்பட்டதாக காணப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய