இரு மாதக் கர்ப்பத்துடன் உயிரிழந்த மாணவி

இரு மாதக் கர்ப்பத்துடன் உயிரிழந்த மாணவி

வடமராட்சியில் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கர்ப்பம் தரித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

திடீர் உடல்நல பாதிப்பு அடைந்த நிலையில் 18 வயதுடைய குறித்த மாணவி நேற்று முன்தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவருடைய சடலம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நேற்று மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவர் இரு மாதக் கர்ப்பமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸார் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணையுங்கள் - சிறிகாந்தா

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றை அமைத்து அதனூடாகச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார்.

அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலேயே 10 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன.

இந்தக் கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பன பங்குபற்றியிருந்தன.

அத்துடன் அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றை அமைத்து அதனூடாகச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார்.

இரு மாதக் கர்ப்பத்துடன் உயிரிழந்த மாணவி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY