
posted 9th April 2022

திருமதி தெய்வமனோகரி ரமேசன்
இயற்கை முறை விவசாயத்திற்கான சேதனப்பசளை உற்பத்தி, இயற்கைப் பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை தொடர்பான செயன்முறைப் பயிற்சி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாயப் போதனாசிரியர் திருமதி தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வலயம் மத்தி உதவி விவசாயப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டெரு தயாரித்தல், இயற்கை முறை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, திரைப்பசளை தயாரித்தல், பழமரங்களைக் கத்தரித்து சேதனப் பசளை இடல், கருகிய உமிப் பாவனை, கிளசரியா நடுகை முறை போன்ற செய்முறைகள் மற்றும் விளக்கப் பயிற்சிகளை இதன்போது வழங்கினர்.
இச்செயலமர்வில் பல்கலைக்கழக மாணவர் பயிலுனர்கள் மற்றும் சத்துருக்கொண்டான் கும்பிளாமடு விவசாயப் போதனாசிரியர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்