அரசைக் கண்டித்து மன்னாரில் பொது மக்கள் போராட்டம்

மன்னாரில் அரசாங்கத்தை கண்டித்து மன்னார் சிவில் அமைப்பும், மன்னார் மக்களும் இணைந்து மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இக் கண்டனப் போராட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பல மணிநேரம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பொது மக்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாதைகளில் அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு இழைத்து வரும் தீங்குகள் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டியிருந்ததுடன் இதன் குரலாகவும் இங்கு ஒலித்தன.

அவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில்;

'வடக்கு கிழக்கு மீதான இராணுவ மயமாக்கலை நிறுத்து'

'மீனவர்கள் விவசாயிகளின் உரிமைகளை பறிக்காதே'

'குழந்தைகளின் பால்மா எங்கே?'

‘பயங்கரவாத சட்டத்தை உடன் நிறுத்து'

'பாமர மக்களை பட்டினிச் சாவால் கொல்லாதே'

'அதிகரிக்கும் விலையேற்றத்தால் அல்லலுரும் எம் மக்கள்'

'தூய்மையான பொறுப்பு வாய்ந்த பாராளுமன்றம் எமக்குத் தேவை'

போன்ற வாசகங்களே இங்கு காணப்பட்டன.

அரசைக் கண்டித்து மன்னாரில் பொது மக்கள் போராட்டம்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய