
posted 8th April 2022
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ். போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.
காலை 8 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய மருந்துகள் இல்லை
சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது
இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது
இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது
மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை
மக்களின் உயிருடன் விளையாடவேண்டாம்
சுகாதார வசதிகளை இல்லாதொழிக்கவேண்டாம்
போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கி இருந்தனர்.
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என்றும் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன எனவும் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய