
posted 5th April 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து திங்கட்கிழமை அன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டக்காரர்கள் ஏ-9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் ஏ-9 வீதியை மறித்துப் போராடிய அவர்கள், பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று 'கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்' எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய