
posted 7th April 2022
வவுனியா வைத்தியசாலையின் முன்பாக வைத்தியர்களினால் ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 01.00 மணியளவில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர் விடுதியில் ஆரம்பமானது. வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது;
மருந்துகள் இல்லை
சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது
சுகாதார வசதிகளை இல்லாதொழிக்கவேண்டாம்
நோயுற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுங்கள்
போன்ற அரசுக்கெதிரான பல்வேறு கோஷங்ககளை எழுப்பியவாறு, பதாதைகளையும் ஏந்தியவாறு வைத்தியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன்