அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுகின்றன

அரச திணைக்களங்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து வியாபாரத் தளங்கள், பிரத்தியேக நிலையங்கள் வழமைபோன்று இயங்கின.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதேவேளை தபாலகங்கள் உள்ளிட்ட சில அரச சேவைகள் இடம்பெறவில்லை.

தனியார் மற்றும் அரச பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ள அதேவேளை, வர்த்தக செயற்பாடுகளும், வங்கி செயற்பாடுகளும் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுகின்றன

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)