அமரர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் சேவைகளை நினைவு கூரல்

கிழக்கின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த கொண்டல், விடிவானம், தினக்கதிர் பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசிரியருமான அமரர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் சேவைகளை நினைவு கூரும் முகமாக வீ.சு.கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த அரங்கு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் எல். தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், சீ. ஜெயந்திரகுமார், வீ. பூபாளராஜா மற்றும் வீ.சு. கதிர்காமத்தம்பியின் குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வீ.சு. கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த அரங்கின் பெயர்ப் பலகையினை அன்னாரின் பாரியார் திரைநீக்கம் செய்து வைத்தார். அத்தோடு அதிதிகளால் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு. கதிர்காமத்தம்பியின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அமரர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் சேவைகளை நினைவு கூரல்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்
>>> பதிவு செய்ய