
posted 1st April 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய தாய்மாருக்கு மட்டுவில் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்தும், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு முன்னெடுக்கும் எங்களுக்கு ஒவ்வொரு தமிழரும் எங்களுக்கு வலுவூட்ட வேண்டும் என மன்னார் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி மனுவேல் உதயசந்திரா ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (01.04.2022) மன்னார் மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி மனுவேல் உதயசந்திரா ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) நாங்கள் ஒரு கண்டன மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யாழ் பகுதியில் வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகளாகிய நாங்கள் நடாத்துவதற்கு இருக்கின்றோம்.
இதற்கு, எமக்கு, எல்லா அமைப்புக்களும், பல்கலைக்கழகம், அரசு சார்பற்ற அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என கோரி நிற்கின்றோம்.
சென்ற மாதம் மட்டுவில் பகுதியில் நடந்த விடயங்களை யாவரும் அறிந்திருப்பீர்கள். வலிந்து காணாமல் போனவர்களின் உறவுகளின் வயதுபோன தாய்மார்களை பொலிசார் தாக்கியது; அவர்களின் உடைகளை கிழித்தெறிந்த சம்பவங்களைக் கண்டித்து இதற்கான போராட்டத்தை நாம் நடாத்த இருக்கின்றோம்.
ஆகவே இது மேலும் மேலும் தொடராதிருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு கைகோர்த்து இதற்கான முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும்.
காணாமல் போனவர்களுக்கு மட்டும் அம்மாக்கள் அல்ல, எம் ஒவ்வொருவருக்கும் அம்மா மற்றும் சகோதரங்கள் இருக்கின்றார்கள். தற்பொழுது மீண்டும் பழையபடி வலிந்து காணாமல் ஆக்கப்படும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாம் இதை நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒன்றுபட்டு முன்னெடுக்கவே இவ் ஊடக சந்திப்பை நாம் இன்று (01.04.2022) நடாத்துகின்றோம்.
நாங்கள் எட்டு மாவட்டங்களும் சேர்ந்தே இக் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். ஆகவே ஒவ்வொரு தமிழ் மகனும், மகளும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு வலுவூட்ட வேண்டும் என நாம் கேட்டு நிற்கின்றோம்.
ஆகவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இச் செயல்பாட்டை முன்னெடுக்க எம்முடன் கலந்துகொண்டு இ போராட்டத்தில் பங்குபற்றுமாறு வேண்டி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House