posted 15th April 2022
TV சுவிச்சைப் போட்ட பெண் மின்சாரம் தாக்கி மரணம்
தொலைக்காட்சியை பார்ப்பதற்காக அதனை இயக்க முனைந்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கைதடி வடக்கில் புத்தாண்டு தினமான நேற்று இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தை சேர்ந்த கு. பரமேஸ்வரி (வயது - 59) என்பவரே உயிரிழந்தவராவார்.
வீட்டிலிருந்தவர்கள் ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அதனை இயக்க முற்பட்டபோதே மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுப்பு எரிவாயு வெடித்துச் சிதறியும் தெய்வாதினமாகத் தப்பிய வீட்டார்
வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்