
posted 3rd April 2022
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்து வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (02) இரவு, மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து சாய்ந்தமருது பொலிஸாரினால் இவர் சுற்றிவளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.
கல்முனைக்குடி மதரஸா வீதியை சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி அதிகாலை வேளையில், சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியிலுள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள தனது வீட்டில், தனிமையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த நிலையில், 81 வயதுடைய சுலைமான் செய்யது வுஹாரி என்பவர் கொலை செய்யப்பட்டு, அவர் வசமிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.
இதையடுத்து சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு, கொலையாளி அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகியிருந்தார். இவரைத் தேடிக்கண்டு பிடிப்பதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பிலுள்ள விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சிவில் உடை தரித்த பொலிஸாரினால் இவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டாமா?
சுகாதார முறையில் பலரும் வியக்கத்தக்க வகையில் ஆரோக்கியமாக, நோய் நொடிகளற்று வாழ்வதற்கும், நிறைவான சக்தியைத் தருவதற்கும் ஒரே ஒரு 21-நாள் உணவு திட்டமிடல், மூலமாக மூலமாக மட்டுமே செய்ய முடியும்.
கிளிக் செய்து பாவித்துப் பாருங்கள். The Smoothie Diet
உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதாவது, உங்களுக்கு நீங்கள் நினைத்தபடி அல்லது நாங்கள் கூறியபடி உடல் எடை குறையவில்லையா? - 60 நாட்கள் இருக்கவே இருக்கிறது. உங்களுடைய பணம் 100% மும் திருப்பித் தரப்படும். அப்போ பணத்திற்கும் பயப்படத் தேவையில்லை. உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நம்புங்கள். ஏனென்றால், இது பலராலும் பாவிக்கப்பட்டு, அனுபவரீதியாகவும் அறியப்பட்ட, அறிவிக்கப்பட்ட உணவுத் திட்டமிடலாகும்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
இங்கே கிளிக் செய்யுங்கள். >>>>> The Smoothie Diet
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House