
posted 19th April 2022
17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றது. நேற்று முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துகொண்ட னர்.
புதிய அமைச்சரவையின்படி, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல். பீரிஸூம், நிதி அமைச்சராக அலி சப்ரியும் தொடர்கின்றனர். கடற்றொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட் டுள்ளார்.
ஏனைய அமைச்சர்களாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன, கல்வி, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரண, பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, போக்குவரத்து கைத்தொழில் அமைச்சராக திலும் அமுனுகம ஆகியோர் பதவியேற்றனர்.
நெடுஞ்சாலைகள் அமைச்சராக கனக ஹேரத், தொழில் அமைச்சராக விதுர விக்ரமநாயக்க, விவசாயம், நீர்ப்பாசன அமைச்சராக ஜானக வக்கும்புர, வர்த்த கம், சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க, நீர் வழங்கல் அமைச்சராக மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சராக விமலவீர திஸநாயக்க, வலுசக்தி, மின்சக்தி அமைச்ச ராக காஞ்சன விஜயசேகர, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக தேனுக விதான கமகே, வெகுசன ஊடக அமைச்சராக நாலக கொடஹேவா, சுகா தார அமைச்சராக சன்ன ஜயசுமண, சுற்றுச்சூழல் அமைச்சராக நசீர் அஹமட், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக பிரமித பண்டார தென்னக் கோன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)