பொதுத் தேவைக்குரிய அரசகாணி அபகரிப்பில் தனிநபர் -  பிரதேச செயலகம் உடந்தை?

பொதுத் தேவைக்குரிய அரசகாணி அபகரிப்பில் தனிநபர் - பிரதேச செயலகம் உடந்தை?

வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியைத் தனிநபர் ஒருவர் கையகப்படுத்த முயல்வதாக தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் புளியங்குளம், கல்மடு சந்திப் பகுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம், கல்மடு பகுதியில் உள்ளய அரச காணி ஒன்று கடந்த 80 வருடங்களுக்கு மேலாக பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை தனிநபர் ஒருவர் அபகரிக்க முயற்சி எடுத்துள்ளதாகவும், குறித்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் நெல் களஞ்சியசாலை, நூலகம், தபாலகம் என்பன காணப்பட்டதாகவும் தற்போது பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

குறித்த கையகப்படுத்தும் முயற்சி கடந்த 10 தினங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் நிலையில் அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கவனத்தக்கு கொண்டு சென்றபோது அதனை தடுத்து நிறுத்த நோட்டீஸ் ஒட்டுவதாக பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர். ஆயினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் தொடர்ந்தும் காணியை கையகப்படுத்தும் முயற்சி இடம்பெற்றதையடுத்து மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து புளியங்குளம் பொலிஸார் குறித்த காணியைக் கையகப்படுத்தும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் பஸ்ஸினால் மோதுண்டு படுகாயம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் ஏ-9 வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஏ-9 வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை முல்லைத்தீவில் இருந்து யாழ். நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில் முதியவர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் கச்சாய் வீதி, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 66 வயதான கு. சற்குணராசா என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடு

சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும், மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அஞ்சலி உரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை லண்டனில் நடைபெற விருக்கின்றன.

மீனாள் நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும் முதல் அமர்வில் சாரல்நாட னின் நாவல் வெளியீடு நடைபெறும். இதில் செல்வி சி. பாரதி, கோகுலரூபன், நாகலிங்கம் சிறிசபேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெறும் இரண்டாவது அமர்வில் பேராசிரியர் செ. வே. காசிநாதனின் 'விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் தோழர் வேலு, உமையாள், ராகவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களுக்கு அஞ்சலி உரையை விமர்சகர் மு. நித்தியானந்தன் ஆற்றுகின்றார்.

*பொதுத் தேவைக்குரிய அரசகாணி அபகரிப்பில் தனிநபர் -  பிரதேச செயலகம் உடந்தை?*

எஸ் தில்லைநாதன்

ஒவ்வொரு படத்திலும் கிளிக் செய்து விபரங்களைப் பாருங்கள்>>>>>