“ஜனாதிபதியே வீட்டிற்று செல்” காலிமுகத் திடலையும் ஆவேஷமான கோஷத்துடன் சுற்றிவளைத்த இளைஞர் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முற்றுகையிடப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் காலிமுகத்திடல் வளாகத்தில் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் இடம்பெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருந்திரளான இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையிலேயே காலிமுகத்திடலை அண்மித்த பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக விண்ணைப்பிளக்கும் கோஷங்களுடன் சுலோகங்களையும் அவர்கள் தாங்கி நிற்கின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“ஜனாதிபதியே வீட்டிற்று செல்” காலிமுகத் திடலையும் ஆவேஷமான கோஷத்துடன் சுற்றிவளைத்த இளைஞர் கூட்டம்

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY