
posted 13th April 2022
மிகவும் கோலாகலமாக நிறைவுற்ற வடமாகாண உதைபந்தாட்ட இறுதிபோட்டி, இளவாலை சென் லூட்ஸ் அணி ஒரு இலட்சம் பணம் மற்றும் பரிசில்களை வென்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட வட மாகாணத்திற்க்கு உட்பட்ட, 48 அணிகள் கலந்துகொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் மிகவும் கோலாகலமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. விளையாட்டு கழக தலைவர் சு. சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதமர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து விளையாட்டு மைதானம் வரை மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரும், முல்லை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான க. கனகேஸ்வரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவையாளர் வ. தவராசா, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் தி. வரதராசன், சட்டத்தரணி செல்வி இ. நிசாந்தினி, உடுத்துறை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. சுபேஸ்குமார், வடமராட்சி கிழக்கு விளையாட்டு உத்தியோகத்தர் சி. ஜிவிந்தன், பருத்தித்துறை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மா. நவநீதமணி, பருத்தித்துறை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் அ. அருளானந்தசோதி, வடமராட்சிக்கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரசாந்தன், மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பொறுப்பதிகாரி திரு அமரசிங்க, உட்பட பலரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தேசியக்கொடியைப் நிகழ் நிகழ்வின் பிரதம விருந்தினரான க. கனகேஸ்வரன் ஏற்றினார். தொடர்ந்து, வடமராட்சி உதைபந்தாட்ட சம்மேளனம் கொடி, வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளன கொடி, உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் கொடி, நிகழ்வின் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி அல்வாய் மனோகரா விளையாட்டு கழகம், இளவாலை சென் லூட்ஸ் விளையாட்டு கழகம் ஆகியவற்றின் கொடிகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து பிரதமர் சிறப்பு கௌரவ விருந்தினர்களால் போட்டியாளர்களுக்கு கைலாகு கொடுத்து போதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வடமராட்சி அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இளவாலை சென் லூட்ஸ் விளையாட்டுக்கழகம் போட்டியில் களமிறங்கியது.
ஒரு கோலை போட்டு இளவாலை சென் லூட்ஸ் விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
தொடர்ந்து வட மாகாண ரீதியில் வெற்றிபெற்ற இளவாலை சென் லூட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கான கேடயம் மற்றும் ஒரு இலட்சம் பண பரிசில், இரண்டாம் இடத்தை பெற்ற அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகத்திற்க்கான கேடயம் மற்றும் ரூபா ஐம்பதாயிரம் பண பரிசில் உட்பட அனைத்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்குமான பரிசில்களையும் பணத் தொகையையும், பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கினர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட போட்டிகளான மென்பந்து துடுப்பாட்டம், கரப் பந்து, உதைபந்தாட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பண பரிசில்கள், கேடயம் பதக்கம் என்பனவும் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
வட மாகாணம் தழுவிய விளையாட்டு நிகழ்வில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நேரடியாக போட்டிகளை கண்டுகளித்தனர்.
இதில் நடுவர்களாக த. தங்கரதீஸ், இ. இலக்சுதன் உட்பட பலரும் பணியாற்றியிருந்தனர்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் குறித்த போட்டியில் நாற்பத்து அணிகள் பங்கு பற்றிருந்தன. கடந்த ஒரு மாத காலமாக இப்போட்டி இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY