யாழ் மாவட்ட எரிபொருள் நிலையங்களின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளியிடவும் - ஐங்கரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளை இல்லாதொழிக்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில்;
மாவட்டத்தில் இயங்குகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிடைக்கப்பெறும் எரிபொருட்களை விநியோகிப்பதில் சீரின்மை, பதுக்குதல் மற்றும் பரல்களில் மீள் விற்பனைக்காக வழங்குதல் போன்ற முறைகேடுகள் இடம்பெறுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை நிவர்த்தி செய்ய மாவட்ட செயலகத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து, அவர் ஊடாக மக்களின் குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளைப் பெற்று அதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றினை (hotline) அறிமுகப்படுத்த வேண்டும். இதனூடாக எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறுகின்ற முறைகேடுகள் சீர் செய்யப்பட்டு மக்கள் வரிசையில் காத்துக் கிடப்பதனை தவிர்க்க முடியும்.

இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெறும் பட்சத்தில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ் மாவட்ட எரிபொருள் நிலையங்களின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளியிடவும் - ஐங்கரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY