
posted 9th April 2022
வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்து வகைகள் தட்டுப்பாடு காரணமான வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை தகுந்த முறையில் பராமரிக்க முடியாத நிலையில் செயல்படுகின்றோம் என மன்னார் வைத்திய சுகாதார பகுதினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (08.04.2022) மன்னாரில் சுகாதார சேவைகள் சங்கங்கள் மேற்கொண்ட அரசுக்கு எதிரான கண்டனப் பேரணியின்போது இங்கு ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
முறையற்ற நிதி மேற்பார்வை காரணமாக இன்று சுகாதார துறை சீர்கெட்டு போயுள்ளது. இதனால் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.
நோயாளிகளுக்கான அடிப்படை மருந்துகள் இல்லாத நிலையால் சுகாதார நிலை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்கான அடிப்படை மருந்து வகைகள் அற்ற நிலையும் காணப்பட்டு வருகின்றது.
இக்காலக்கட்டத்தில் சுகாதாரம் ஒரு முக்கியமானதாக காணப்படுகின்றது. ஆகவே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் அரசு காணப்பட வேண்டும்.
ஆகவே இருக்கும் நிதியை சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கீடு செய்து நோயாளிகளாக வருவோரின் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என சுகாதார துறையினர்களாகிய நாங்கள் இந்தவேளையில் கேட்டு நிற்கின்றோம்.
இல்லையேல் அரசு தனது பதவிகளை துறந்துவிட்டு நல்லதொரு நிர்வாகத்துக்கு வழிவிடுமாறு சுகாதார துறையினராகிய நாங்கள் இந்த நேரத்தில் அரசை கேட்டு நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய