மன்னார் மக்களின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கும் நடவடிக்கையில் உலக உணவு திட்டம்

உலக உணவு திட்ட அமைப்பும் அரசும் இணைந்து நாட்டில் தற்பொழுது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சனை காரணமாக மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் நடவடிக்கை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இப்பொழுது மக்கள் மத்தியில் உணவு பிரச்சனை என்னவிதமாக இருக்கின்றது என்பதைப்பற்றி 17 மாவட்டங்களில் 18.04.2022 தொடக்கம் 22.04.2022 வரை அங்குள்ள அரசாங்க அதிபர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து உலக உணவு திட்ட அதிகாரிகளும் இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் இவ் ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை (22.04.2022) மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர், அரசு அதிபர் செயலகத்தில் கடமைபுரியும் திட்டமிடல் அதிகாரிகள். கமநல சேவை திணைக்கள உதவி பணிப்பாளர், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய விரிவாக்க திணைக்கள அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமூர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் கால்நடை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் முக்கியமாக உணவு பாதுகாப்பு என்னவிதமான பிரச்சனையாக இருக்கின்றது? அதற்கு உலக உணவு அமைப்பு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம்?

அரசு மற்றும் உலக உணவு அமைப்பு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கையாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்றும் இன்றைய நிலையில் மன்னார் மக்கள் என்னவிதமான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அரசாங்கம் இவ்வாறான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதைப்பற்றி இக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இன்றைய நிலையில் எவ்வாறான செயல் திட்டங்களை செயல்படுத்தலாம் அதாவது உலக உணவு அமைப்பால் செயல்படுத்தப்படுகின்ற பணமாகவா அல்லது வேலைக்கான அத்தியாவசிய உணவு வழங்கல் மூலமாகவா செயல்படுத்துவது என இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உலக உணவு அமைப்பிலிருந்து உலக உணவு திட்ட மாவட்ட பொறுப்பாளர் ஆர்.சி. முகமட், உலக உணவு திட்ட முகாமைத்துவப் பிரிவு தலைமை அதிகாரி கிருஷ்ணராஜன் ஆகியோரின் பங்களிப்புடனே இவ் அமர்வு இடம்பெற்றது.

மன்னார் மக்களின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கும் நடவடிக்கையில் உலக உணவு திட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY