
posted 14th April 2022
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை ஆலயங்களில் விசேட பூசைகள் இடம் பெற்றன.
மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை விசேட பூசைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் நேற்று விசேட ஆராதனைகள் நடை பெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூசை இடம்பெற்றன.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும் மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் கை விசேடங்களும் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன்