
posted 11th April 2022
நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொழுது போக்கிற்காக தினமும் வருகை தரும் பொது மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நிந்தவூரை அண்மித்த வேறு பிரதேசங்களிலிருந்தும் பொது மக்கள் பொழுது போக்கிற்காக நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மின்தடை மற்றும் தற்போதய அதி உஷ்ண காலநிலை காரணமாக பெரும் பாலானோர் கடற்கரைப் பிரதேசங்களை நாடிய வண்ணமுள்ளனர்.
இதனைக் கவனத்திற் கொண்ட நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், கடற்கரைப் பிரதேசத்திற்கு வரும் உள்ளுர், வெளியூர் மக்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றார்.
ஏற்கனவே கடற்கரைப்பிரதேச நெடுகிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அமர்ந்து ஓய்வு பெறுவதற்காக ஆசன வசதிகள், மின் ஒளிவசதிகளுடன் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை தற்சமயம் தினமும் பொழுது போக்கிற்காக வருகை தருவோர் தொகை அதிகரித்துள்ளதால் கடற்கரைப் பிரதேசமெங்கும் சுத்தம் பேணல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி தவிசாளர் தாஹிரின் பணிப்பின்பேரில் சபை சுத்திகரிப்பு ஊழியர்களின் பங்களிப்புடன் துப்பரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தவிசாளர் தாஹிரின் இத்தகைய நடவடிக்கைகள் பொது மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY