
posted 23rd April 2022
தான் வழமை போன்றே நலத்துடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது
பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவித்த பிரதமர் அவர்கள், தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் எனவும் அவரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY