
posted 3rd April 2022

அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் நேற்று முன்தினம்(01) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கோட்டைமுனை சேகர முகாமைக்குருவும், வட-கிழக்கு சபா சங்கத் தலைவருமான அருட்பணி கலாநிதி கே.ஜே.அருள்ராஜா, மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப்பருவ பராமரிப்புக்கும், அபிவிருத்திக்குமான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா, அமிர்தகழி மெதடிஸ்த ஆலயகுரு அருட்பணி நிரேதா சம்பத் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முன்பள்ளி மாணவர்கள் ஆடல், பாடல் மற்றும் பேச்சுக்கள் ஊடாகத் தமது திறன்களை வெளிக்கொணர்ந்தனர். அத்தோடு இவ்வாண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்கள் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
முன்பள்ளிப்பாடசாலைகளின் முக்கியத்துவம், மற்றும் பெற்றோர் பங்களிப்பு தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் உரைகளில் வலியுறுத்தப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய