
posted 18th April 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மீனவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிகிறது.
பருத்தித்துறை பகுதிக்கு உட்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களினால் கடற்றொழிலில் ஈடுபடுவோரது பட்டியலை தயாரித்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு வழங்கப்பட்டு அதற்கு அமைவாக ரூபா 4000 பெறுமதியான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக பிரதேசத்திலுள்ள மீனவர்கள் கொள்கலன்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதுடன், பெட்ரோல் நிரப்புவதற்காகவும் நீண்ட வரிசையில் முச்சக்கர வண்டி மற்றும் இதர பெற்றோல் வாகனங்களுடன் கொழுத்தும் வெயிலிலும் காத்திருப்பதை அவதானிக்க முடிவதுடன் வீட்டுத் தேவைகளுக்காகன குறிப்பாக சமையலுக்கான குக்கர்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)