posted 27th April 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி வியாழக்கிழமை (28) நடைபெறவுள்ள நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ம. ஆ. சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கும்முகமாக நாளையதினம் (28) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழில்சங்கங்கள் நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன.
இதற்கு ஆதரவைத் தெரிவித்தும், அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்கும்முகமாகவும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழில்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டிநிற்கிறது என்றுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் வியாழக்கிழமை (28) முன்னெடுக்கப்படவுள்ள தொழில்சங்கப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் நேற்று வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அறிக்கை
நாடு தழுவிய ரீதியில் வியாழக்கிழமை (28) முன்னெடுக்கப்படவுள்ள தொழில்சங்கப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் நேற்று வெளியிட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)