
posted 18th April 2022
பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் நேற்று சனிக்கிழமை இரவோடு இரவாக மதமாற்ற கிறிஸ்தவ சபை மன நோயாளிகளால் இயேசு பிரசார சுவரொட்டிகள் ஆலய புனிதத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே ஒட்டப்பட்டுள்ளன என்று சிவசேனை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமக்கு இந்து உணர்வாளரிடம் இருந்து இவ்வாறு ‘நல்லூரை சுற்றி போஸ்ரர்கள் ஒட்டப்படுகின்றன என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து எமது அமைப்பை சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஒட்டியவர்களைத் தேடினோம். எனினும் ஒட்டியவர்கள் எம் கைகளில் சிக்கவில்லை. ஒரு படி ரக வாகனத்தில் வந்த 4 ஆண்களும் ஒரு பெண்ணுமே இந்த கீழ்த்தர இழிவான செயலில் ஈடுபட்டனர் என்று எமக்கு தகவல் தந்த உணர்வாளர் கூறியிருந்தார்.
இவர்கள் நல்லூர் கோவிலை சுற்றியுள்ள சிறிய ஆலயங்களின் சுவர்களிலும் தங்கள் இழி குணத்தைக் காட்டியுள்ளனர். சித்திரா பெளர்ணமி நன்நாளில் இந்துக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு செல்லும்போது இந்த விஷம பிரசார சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற கீழ்த்தர நோக்கிலேயே இந்த சுவரொட்டிகள் இந்த தீய மதமாற்ற கிறிஸ்தவ சபையினரால் நல்லூரை சுற்றி ஒட்டப்பட்டுள்ளன.
நல்லூரை சுற்றி ஒட்டப்பட்ட அனைத்து சுவரொட்டிகளும் உருத்திர சேனையால் கிழித்து அதே இடத்தில் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறான கீழ்த்தர செயல்கள் செய்பவர்கள் எம் கைகளில் சிக்கும்போது அவர்கள் செய்த பிழையின் ஆழம் உணர வைக்கப்படும் - என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

எஸ் தி ல்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)