
posted 1st April 2022
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தற்சமயம் வரட்சியுடன் கூடிய அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பகல் வேளைகளில் நடமாடுவதற்கு பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவருகின்றனர்.
இந்த அதி உஷ்ண கால நிலையில் நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களை வாங்கி உண்டு தாகசாந்தி பெறுவதிலும் உஷ்ண நிலமையை தனித்துக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கமைய தற்போதைய அறுவடை சீசனாக உள்ள வெள்ளரி பழங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள், அதேவேளை தற்பொழுது அறுவடைய செய்யப்படும் வத்தைப் பழங்களையும் (வோட்டர் மிலோன்) வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மக்கள் மத்தியில் இப்பழங்கள் அதிக வரவேற்பையும் கிராக்கியையும் பெற்றிருப்பதால், பலர் இப்பழங்களை வாகனங்களில் கொண்டு சென்று உள்ளுர் வீதிகளில் விற்பனை செய்வதில் ஈடுபட்டுவருவதுடன் நாளாந்தம் நல்ல வருமானத்தையும் பெற்றுவருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House