
posted 29th April 2022
இலங்கையின் உள்நாட்டில் பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதியை தாண்டி பன்மடங்கு அதிகமான விலைகளுக்கு விற்கப்படுகின்றது. மேலதிகமாக நிர்ணயிக்கப்படும் விலையின் வருமானம் யாரைச் சென்றடைகிறது என ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
சபா குகதாஸ் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும், ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ள போது, டொலரின் பெறுமதி அதிகரித்ததுடன் ரூபாய் மிகப் பெறும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் உள் நாட்டில் பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதியை தாண்டி பன் மடங்கு அதிகமான விலைகளுக்கு விற்கப்படுகின்றது. உதாரணமாக டொலர் 200 ஸ்ரீலங்கா ரூபாவாக இருக்கும் போது, 1000ஸ்ரீலங்கா ரூபா விலையில் இருந்த சீமெந்துப் பை ஒன்று டொலர் 350ஸ்ரீலங்கா ரூபாவாக இருக்கும் தற்போது 2850ஸ்ரீலங்கா ரூபாவிற்கு விற்பனையாகிறது. சாதாரணமாக டொலரின் பெறுமதியில் கணித்தால் 1750ஸ்ரீலங்கா ரூபாவாகத்தான் அது விற்கப்பட வேண்டும். ஆகவே, மேலதிகமாக பெறப்படும் 1100ஸ்ரீலங்கா ரூபாவை யார் பெற்றுக் கொள்கின்றார்கள்?
இதுதான் இங்குள்ள பிரதான கேள்வி!
டொலரின் பெறுமதிக்கு மேலதிகமாக நிர்ணயிக்கப்படும் விலையின் வருமானம் யாரைச் சென்றடைகிறது? ஒன்று, நாட்டின் திறைசேரிக்கா? அல்லது தனி நபருக்கா? அல்லது குறிக்கப்பட்ட குழுவினருக்கா? இதற்கான பதிலை அரசாங்கம் கூறவேண்டும்!
டொலரின் பெறுமதி அதிகரிப்பே பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறும் ஆட்சியாளர்கள், ஏன் டொலரின் பெறுமதியை மீறி பன்மடங்கு அதிகமாக சகல பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தாமல் இருக்கின்றனர்? இதன் உள் நோக்கம் தான்என்ன?
டொலரின் பெறுமதிக்கு ஏற்ப பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்றால் நாட்டின் சகல நிதிக் கட்டமைப்புக்களும் செயல் இழந்து சீர்குலைந்து விட்டதாகவே கருத வேண்டும் அதாவது நாட்டின் நிதி அமைச்சு தனது இயலுமையை இழந்து விட்டது என்பது உண்மையா? இல்லை தனி நபர்களின் கைகளுக்கு பெரும் தொகைப் வருமானங்கள் செல்கின்றனவா? என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY