சமூகத்தில் வளர்ந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சி சமூகத்திலுள்ள சூழ்நிலை காரணமாக துஷ்பிரயோகங்கள்.

சமூகத்தில் வளர்ந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சி சமூகத்திலுள்ள சூழ்நிலை காரணமாக முறைப்பாடுகள், முரண்பாடுகள், துஷ்பிரயோகங்கள் போன்ற சம்பவங்கள் தற்பொழுது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டீமெல் தலைமையில் வெள்ளிக்கிழமை (22.04.2022) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .

இக் கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை ஒழுங்கீனம், இளம்வயது திருமணம் மற்றும் கர்ப்பம், உடல் உள ரீதியான பிரச்சினைகள், பாடசாலை இடைவிலகல் விழிப்புணர்வு, நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், போதைப் பொருள் பாவனை, சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளாக குடும்ப வன்முறை, குடும்ப பிரச்சனை, பெண் பிள்ளை பாதுகாப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவிகள் போன்றவை ஆராயப்பட்டன.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து உரையாற்றும்போது;

இன்று நடைபெறும் சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டமானது மிகவும் சாலப் பொருந்தியதாக அமைகின்றது.

கடந்த காலத்தில் இது தொடர்பான கூட்டங்கள் சிறந்த முறையில் நடைபெற்று, பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பாக உண்ணிப்பாக கவனித்து வரப்பட்டது.

சமீபகாலமாக சமூகத்தில் வளர்ந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சி, சமூகத்திலுள்ள சூழ்நிலை காரணமாக முறைப்பாடுகள், முரண்பாடுகள், துஷ்பிரயோகங்கள் போன்ற சம்பவங்கள் தற்பொழுது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிராமங்களின் மட்டில் மிகவும் இறுக்கமான முறையில் நீங்கள் பணியாற்றிக் கொண்டு வருகின்றீர்கள். இது தொடர்பாக பல விடயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கின்றன. சில விடயங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிராமங்களில் பணியாற்றிவரும் உத்தியோகத்தர்கள், நீங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களைப்பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேண்டிய தேவைகள் தற்பொழுது இருக்கின்றன.

இதற்கு நெறுக்கமான உறவுகளை அவர்களுடன் வைத்துக்கொள்ளுதல் மூலம் அவர்களைப்பற்றிய உண்மை தன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்கள் இவர்களுக்கு அவர்கள் தாய் என்ற மனப்பான்மையுடன் இருக்கும் தன்மையை அந்த பிள்ளைகள் உணரக்கூடிய விதத்தில் இருவருக்குமிடையே நெறுக்கம் இருக்க வேண்டும்.

இவ்வாறு இருக்கும்போது, பிள்ளைகள் தங்கள் வீடுகளில் சொல்ல முடியாத விடயங்களை நம்பிக்கை கொண்டுள்ள ஆசிரியர்களிடம் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு உள்ளாவார்கள்.

அரசு சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றீர்கள். ஆகவே பெண்கள், சிறுவர்கள் ஆகியோரின் பிரச்சனைகளுக்கு இதன் உத்தியோகத்தர்கள் ஊடாக செயல்படுவதற்கான வழிகாட்டல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டு நிற்கின்றேன்.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் உதவி மாவட்டச் செயலாளர் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மாவட்ட வைத்தியர்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY