
posted 18th April 2022
சட்டவிரோதமாக மாடுகளை இறைச்சிக்காக வெட்டியவர்கள் கைது
சுழிபுரத்தில் பற்றைக் காணியில் வைத்து திருட்டு மாடுகள் இரண்டை சட்டவிரோதமாக இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவின் புலனாய்வாளர்களால் இவர்கள் இருவரும் நேற்று ஞாாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 40 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் மோதி இளைஞர் மரணம்
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த ரயிலுடன் வவுனியா, ஒமந்தை அரச வீட்டுத் திட்டத்துக்கு அண்மித்த பகுதியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.
இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை, அரச வீட்டு திட்டத்துக்கு அண்மித்த பகுதியில் பயணித்தபோது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞன் ஒருவரை மோதியதில் அவர் மரணமடைந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் ரயிலில் எடுத்துச் செல்லப் பட்டு ஓமந்தை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தர மூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமானார்.
முகக் கவசம் பொது இடங்களில் அணிவது கட்டாயமல்ல
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக நாட்டின் புதிய சுகாதாரத் துறை அமைச்சர் சன்ன ஜயசுமண நேற்று அறிவித்தார்.
எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமானது என்றும் அவர் கூறினார்.
நீண்டநேரம் பெற்றோலுக்காக கியூவில் நின்றவர் உயிரிழந்தார்
சாவகச்சேரியில் பெற்றோலுக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இன்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரி - நுணாவில் லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வாசலை அண்மித்தபோது திடீரென மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றனர்
புதிய அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாலை 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற் றனர்.
இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜீ. எல். பீரிஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராக ரோஹண திஸநாயக்க, பெருந் தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக அருந்திக பெர்னாண்டோ, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக தாரக பால சூரிய, வீடமைப்பு இராஜாங்க அமைச் சராக இந்திக அநுரத்த, நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக சனத் நிஸாந்த, மகாவலி இராஜாங்க அமைச்சராக சிறிபால கமலத் பொறுப்பேற்றனர்.
இதேபோன்று, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக அநுராத ஜயரத்ன, சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சராக சிசிர ஜயகொடி, கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பிரசன்ன ரணவீர, சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக டீ. வி. சானக, கால்நடை வள இராஜாங்க அமைச்சராக டீ.பி. ஹேரத், கிராமிய பொருளாதார பயிர் செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான், வர்த்தக இராஜாங்க அமைச்சராக அசோக பிரியந்த, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக அரவிந்த் குமார், கலாசார இராஜாங்க அமைச்ச ராக கீதா குமாரசிங்க, கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக குணபால ரத்னசேகர, சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கபில நுவன் அதுகோரள, சுகாதார இராஜாங்க அமைச்சராக கயா ஸான் நவநந்த, கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் ஆகியோர் பதவிப்பிர மாணம் செய்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY