
posted 15th April 2022
இன்று பெரிய வெள்ளிக்கிழமை. நேற்று பெரிய வியாழக்கிழமை அன்று, இறைவனாம் இயேசுநாதர், அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவரான ஜுதாஸ் ஸ்கரியோத் என்பவனால் 30 வெள்ளிக் காசுக்காகக் காட்டிக் கொடுக்கப்பட்டு, எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிலாத்து அரசனால் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கடப்பட்டார். அதுவும்சிலுவைச் சாவுக்குக் கையளிக்கப்பட்டார். இஸ்ரேயலரின் வழக்க முறைப்படி சிலுவைச் சாவு என்பது, கொடுக்கப்படும் தண்டனைகளிலே மிகவும் கேவலமான தண்டனையாகும்.
அத்தண்டனையை நமது இறைவனாம் இயேசுக்கிறீஸ்த்து நமக்காக, நாம் செய்த பாவங்களுக்காக, நம்மேல் வைத்த இரக்கத்தால், அன்பினால், பாவங்களிலிருந்து நம்மை மீட்க அந்தக் கொடூரச் சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்டார், நமது இறைவனாம் இயேசு.
பெரிய வியாழன் கையளிக்கப் பட்ட நேரம் தொடக்கம் நமது இறைவன் வாதகைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை சிலுவையைச் சுமந்து “கொல்கொத்தா” (என்பது ஹிபுறு (Hebrew) மொழியில்) அல்லது “மண்டை ஓடு” (என்பது தமிழ் மொழியில்) மலைக்கு கொண்டு செல்லக் கட்டளையிடப்பட்டார்.
கொல்கொத்தா மலையிலே இயேசு கிறீஸ்த்து இரு கள்வர்நடுவினிலே சிலுவையினிலே அறையப்பட்டு தொங்க விடப்பட்டார்.
மூன்று மணிநேரம் சிலுவையில் தொங்கிய இறைவனாம் இயேசுக்கிறீஸ்த்து மாலை 3 மணிக்கு தனது ஆவியைக் தனது தந்தையிடம் ஒப்படைத்து உயிர் துறக்கப் போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் கிறீஸ்த்தவர்கள் அனைவரும் அவர்களது கடும் உபவாசத்தோடு கண்ணீர் மல்கி சிலுவையின் முன்னால் தத்தமது பாவங்களுக்காக மனமிரங்கி உள்ள நேரமிது.
சிலுவையில் அறையப்பட்டு (ஏறக்குறைய நண்பகல்வ 12 மணியிருக்கும்), மூன்று மணி நேரமாக மரண அவஸ்த்தைப்பட்ட நமது இறைவனின் வலது பக்கமாகத் சிலுவையில் அறையப்பட்ட கள்வன் கூறிய வார்த்தைகளாவது, “யேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். இதுதான் பாடலாக ஒலிக்கின்றது.
ஏறக்குறைய பிற்பகல் மூன்று மணியிருக்கும், “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.