
posted 5th April 2022

பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் திடீர் மறைவு நாட்டின் முழுக் கல்விச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
தமிழ் பேசும் சமூகத்தின் சிரேஷ்ட கல்விமான் பேராசிரியர் சோ.சந்திரசேகன் எப்போதுமே சிறுபான்மையினரின் கல்வி சம்மந்தமான விடயங்களில் கூடிய கரிசனையுடன் செயலாற்றி வந்துள்ளார்.
அதனால் தமிழ் சமுகம் மட்டுமன்றி முஸ்லிம் சமுகத்தினதும் நன்மதிப்பையும் மரியாதையையும் அவர் பெற்றிருந்தார்.
இன, மத, வர்க்க வேறுபாடுகள் கடந்து அனைத்து தரப்பினருடனும் சகஜமாக பழகி வந்த அன்னாரின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைகின்றேன்.
அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய