என்று நீங்கும் கியூ வரிசையுகம்?

இந்து மகா சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கைத் திருநாட்டின் இன்றைய நிலை பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
நாட்டின் பாரிய பொருளாதார வீழ்ச்சி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கே பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைச்செலவு உயர்வு, விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல பின்னடைவுகள் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.

இந்த நிலையில்தான் நாட்டின் நாலா திசைகளிலும் கியூ வரிசையுகம் ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பால்மா, எரிபொருட்கள், எரிவாயு, என்பவற்றுக்கென நீண்ட கியூ வரிசைகளில் காத்திருந்து பெற வேண்டிய அவலமும், ஏன் சில சமயம் கிடைக்கப்பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாப நிலமையும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

இவ்வாறு கியூவரிசையில் நின்று அவஸ்தையுற்ற ஒரு சிலர் அந்த வரிசைகளிலேயே மயங்கி வீழ்ந்து மரணித்த சம்பவங்கள் சிலவும் பதிவாகியுள்ளன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்காக ஆண்களும், பெண்களும் பல மணி நேரத்திற்கு முன்பே, அதுவும் இருளே பிரியாத அதிகாலை வேளையில் கியூவில் நின்று எரிவாயு பெற்ற சம்பவம் ஒன்று நிந்தவூரில் நடைபெற்றுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்ற தகவலை இங்கு முதல் நாள் இரவே பெற்றுக் கொண்ட பொது மக்களே இவ்வாறு அதிகாலையிலேயே முண்டியத்து கியூவரிசையில் காத்திருந்தனர்.

நிந்தவூர் கடற்கரைப் பூங்கா அருகில் இத்தகைய கியூவரிசையும், எரிவாயு சிலிண்டர் விநியோகமும், பொலிஸாரின் கண்காணிப்புடன் இடம்பெற்றது.

இலங்கையில் இத்தகைய கியூ வரிசையுகம் முடிவுறும் காலம் எப்போது வருமோவெனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

என்று நீங்கும் கியூ வரிசையுகம்?

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House