
posted 5th April 2022
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு. அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு நிந்தவூரில் இடம்பெற்றது
நிந்தவூரின் புகழ் பெற்ற கல்வியியலாளரான சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் புனித ரமழானை முன்னிட்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம் ரீ எம் சரீம், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ எல் பைரூஸ், சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதி எம் நுஸ்லி, பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் பொருளாளர் எஸ் ஏ பாஸித், உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரூபா பெருமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய