இலக்கியச் சந்திப்பு
இலக்கியச் சந்திப்பு

கலாநிதி செல்லையா இராஜதுரை

ஜேர்மனி தமிழ் வான்அவை நடத்தும் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பின் 23 ஆவது நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிறு மாலை 7.30 மணிக்கு தமிழ் வான்அவை நிறுவுனர் கௌசி தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த இணையவழிக் கலந்துரையாடல் இலங்கையின் முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், பேச்சாளரும், எழுத்தாளரும், ஆன்மீகவாதியுமான சொல்லின் செல்வர் கலாநிதி செல்லையா இராஜதுரையைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த நல்லாசிரியர் வே. பூங்குழலி பெருமாளின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகவுள்ள நிகழ்வில், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களின் நடன இசை நிகழ்ச்சி மற்றும் கவிதை அரங்கேற்றம் ஆகியன இடம்பெறவுள்ளன.

இதன்போது இலங்கையைச் சேர்ந்த தம்பிராஜா ஈஸ்வரராஜா மற்றும் தவராஜா இராஜேந்திரன், பிரான்சைச் சேர்ந்த எம்ஆர். ஸ்ராலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். அத்தோடு டென்மார்க்கைச் சேர்ந்த திருமதி கலாநிதி ஜீவகுமாரன் நன்றியுரை வழங்கவுள்ளார்.

கலந்துரையாடலில் இணைய வழிகுறியீட்டு எண்- 2509770769, கடவுச்சொல்- 246810 என்ற இணைப்பை ஏற்படுத்திக் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியச் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY