இருவருக்கு விளக்கமறியல்

சாய்ந்தமருது பிரதேசத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி விட்டு, வீடியோவைக் காட்டி அச்சிறுமியிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரி மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 வயதான தனது மகளை மூன்று நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த ஜனவரி 05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட பொலிஸார், தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (18) ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரை கல்முனையிலுள்ள உணவகமொன்றிலும், சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை அவரது வீட்டிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கல்முனை நீதிவான் நீதிமன்றல் நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் அவர்களை வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபருக்கு பிடியாணை உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கு விளக்கமறியல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY