
posted 7th April 2022
வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும்போதுதான் எமக்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வட்டிதுறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஜனாதிபதியின் கோரிக்கையின்படி காபந்து அரசாங்கத்தை பிரதான எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகள் நிராகரித்துள்ளன. இந்தச் சூழலின் பின்னணியில் தான் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு உறுதியான இறுக்கமான தீர்மானத்துக்கு வரவேண்டியவர்களாக இருக்கின்றோம். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.
இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும்போதுதான் எமக்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும்-என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய