ஆட்சியை  பிடிப்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்டது  - வைத்தியர்  ப. சத்தியலிங்கம்
ஆட்சியை  பிடிப்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்டது  - வைத்தியர்  ப. சத்தியலிங்கம்

வைத்தியர் ப. சத்தியலிங்கம்

உலகில் வாழும் கிறீஸ்தவர்கள் அனைவரும் உயிர்த்த இயேசுவின் நாளை நினைவுகூரும் தினம்தான் உயிர்த்த ஞாயிறு தினமாகும். சந்தோஷமாகக் கொண்டாடும் இப்புனித நாளை வழமைபோலக் கொண்டாடுவதற்கு தத்தமது கோயில்களில் கூடியிருந்து விஷேட ஆராதனைகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கையிலேதான் அந்தக் கொடூர கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன, மூன்று வருடங்களின் முன்பு.

அந்த நாளை நினைவுகூரும் முகமாக 21.04.2022 வியாழக்கிழமை மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

இத் தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவருமான வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்;

இந்த நாட்டின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பிரச்சினையும் முன்னெடுப்பார்கள்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை வைத்து 50 வருடங்களாக ஆட்சி செய்தார்கள். மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கண்டி மாவனல்ல பிரச்சினைகளை கொண்டு வந்தார்கள்.

பிறகு, இலங்கையில் தங்களுடைய செல்வாக்கு சரிந்து கொண்டு போகும்போது இந்த மஹிந்த குடும்பம் வேறு கட்சி ஆட்சி செய்தாலும் அதிகாரத்தை தாங்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

அவர்களுடைய மிக முக்கியமானவர்கள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று விசாரணை அறிக்கையில் சொல்லப்படுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகள் உளவுத் தகவல்களை வழங்கி இருந்தபோதும், அந்த நேரம் ராஜபக்ச அரசு இல்லாவிட்டாலும் குறித்த அரசாங்கங்கள் அதனை தடுப்பதற்கு தவறியுள்ளது.

நாங்கள் சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் குறித்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இனம் மதம் சாதி பேதம் பாராமல் அதில் கொல்லப்பட்ட எல்லா மக்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்து அவர்களின் ஆத்ம சாந்திக்காக தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும்

அதே நேரம் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதோடு, இனம், மதம், மொழி போன்ற பிரிவினையை காட்டி மிக மோசமான தாக்குதல் அல்லது செயற்பாடுகள் இந்த நாட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு உரிய மேலதிக விசாரணைகளை உரிய முறையில் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

ஆனால், இந்த அரசாங்கம், அவ்வாறான நீதியான விசாரணை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை எமக்கு இல்லை.

ஏனெனில், எந்த அரசாங்கமாக எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய குறிக்கோள்.

ஆனால் மக்களுடைய பொருளாதாரம், நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, அவ்வாறானவர்கள் ஆட்சிக்கு வரும்போது தான் இந்த நாடு முன்னேறும்.

ஆனால் இங்கு அரசாங்கம் வாங்கிய கடனில் 30 வீதத்திற்கு மேற்பட்ட காசை கொள்ளையடிப்பதற்கு ஆட்சி முகாமைத்துவம் இருக்கும் இந்த நாட்டில் நல்ல திட்டங்கள் அவர்களின் கையில் இல்லாத பட்சத்தில் தான் ஒவ்வொரு முறையும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக இவ்வாறான இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு குளிர்காயும் நபர்களாகள் ஆட்சிக்கு வருகிறார்கள்.

இதில் மக்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்

இனிமேலாவது இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு நல்ல கொள்கைகளையும், திட்டங்களையும் கொண்டுவரும் இளம் சமுதாயத்தினருக்கு சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

அதைவிடுத்து காசுக்காகவும், போத்தலுக்காகவும் வாக்குகளைப் போடும் சூழல் இருக்கும் மட்டும் இவ்வாறான பிரச்சினைகள் ஒரு போதும் தீரப் போவதில்லை.

எனவே மக்கள் தான் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதே நேரம் தமிழ் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழர்களை பிரதிநிதி உட்படுத்தும் ஒரு முக்கியமான கட்சி என்ற வகையில் இந்த தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் பாதுகாப்பதோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஏனையவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் வவுனியா மாவட்ட தமிழரசு கட்சி தலைவருமான பா சத்தியலிங்கம் இவ்வாறு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை  பிடிப்பதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்பட்டது  - வைத்தியர்  ப. சத்தியலிங்கம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY