அரிசிக்கும் வரிசை - கவலையில் மக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்பொழுது அரிசிக்கும் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவிற்கும், ஒரு கிலோ தீட்டல் அரிசி 110 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் அரிசியினை வாங்குவதற்காக சதோச விற்பனை நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசியினை பெற்று வருகின்றனர்.

அரிசிக்கும் வரிசை - கவலையில் மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)