
posted 11th April 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டம் இன்று சிலாபம் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் முபாறக் மௌலவியின் வேண்டுகோளை ஏற்று, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எம் எஸ் எம் சப்வான் தலைமையில் கலந்து கொண்டனர்.
இத்தகவலை கட்சி சார்பில் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
தவிரவும் நாட்டில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கும் நிலையில் ஜனாதிபதிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்