
posted 7th April 2022
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சமூகமும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்தது.
பகல் உணவு நேர தொழிற்சங்க போராட்டம் என்ற ரீதியில் வைத்தியசாலை முன்றலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்திக்கொண்டு, கோஷங்களை எழுப்பினர்.
சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம்
நோயுற்றவர்களை காப்பாற்ற மருந்துகளைக் கொடு
சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் கை வைக்காதே
அத்தியாவசிய மருந்துகளை தடுக்காதே
கோட்டா நீ வீட்டுக்கு போ
கோட்டா நீ எங்கள் நாட்டை சீரழிக்காமல் உமது அமெரிக்காவுக்கே ஓடு
களவெடுத்த பணத்தை திரும்பிக் கொடு
ராஜபக்ச குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக
பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, மின்சாரம் இல்லை, கேஸ் இல்லை, பால்மா இல்லை மொத்தத்தில் ஒன்றுமே இல்லை
போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை, செவ்வாய்க்கிழமை (05) இரவு கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை போன்ற பிரதேசங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன. நள்ளிரவு வரை இடம்பெற்ற இப்போராட்டங்களில் பெருந்திரளான இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய