
posted 19th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
விசேட ஒன்றுகூடல்
நிந்தவூர் பிரதேச சபை ஊழிய நலன்புரிச் சங்கத்தினால் நோன்புப்பெருநாள் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டிய விசேட ஒன்றுகூடல் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. பிரதேச சபை செயலாளர் திருமதி ரி. பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விசேட ஒன்றுகூடலின் போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இத்தகைய ஒன்றுகூடல்கள் மூலம் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மத்தியில் இனஐக்கியமும் நல்லினக்கமும் மேலோங்கி மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்க வழிவகுப்பதாக நிகழ்விற்கு தலைமை தாங்கிய பிரதேச சபை செயலாளர் திருமதி பரமேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)