
posted 5th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வலி வடக்கில் காணி சுவீகரிக்கர மக்கள் நேற்றும் கடும் எதிர்ப்பு
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று (05) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தையும் இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி உரிமையாளர்களின் எதிர்ப்பை அடுத்து காணியை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜே/226 மற்றும் காங்கேசன்துறை ஜே/233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)