
posted 8th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வயலின் வித்துவான் ஜெயராமன் மறைவு

யாழ்ப்பாணத்தின் பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று (08) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்று ஞாயிறு (07) இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார். எனினும், சுகவீனம் காரணமாக அவர் இடையிலேயே அக் கலை நிகழ்ச்சி ரத்துச்செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் காலமானார். அவர் இறப்பின் காரணம் இற்றைவரைத் தெரியவில்லை.
அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)