
posted 23rd April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வண்டுகள் நிறைந்த உலருணவுகள் திடீர் சோதனையில் சிக்கியது

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதைத் தடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவைப் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருதில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உலருணவுகள், மனித ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப் பண்டங்கள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)